அரசு சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு 2026 - உடனே விண்ணப்பியுங்கள்!
மாவட்ட நலச்சங்கம் (தேசிய நலக்குழுமம்) தற்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வேலைவாய்ப்பு அறிவிப்பு
பணி வகை: தற்காலிக ஒப்பந்தப்பணி (11 மாதங்கள்)
விண்ணப்பிக்கும் முறை: தபால் அல்லது நேரடியாக
கடைசி நாள்: 06.02.2026 (மாலை 5.00 மணி வரை)
நிபந்தனைகள்:
- இப்பணிகள் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
- 11 மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் இடைவெளி விட்டு மீண்டும் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
- சுகாதார ஆய்வாளர் பணிக்கு 40 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
பணியிட விவரங்கள்
செவிலியர் (Staff Nurse) 3 இடங்கள்
கல்வித் தகுதி:
DGNM அல்லது B.Sc Nursing (INC அங்கீகாரம் பெற்றது)
மாத ஊதியம்: ₹ 18,000/-
ஆய்வக நுட்புனர் (Lab Tech) 1 இடம்
கல்வித் தகுதி:
12-ம் வகுப்பு தேர்ச்சியுடன் 2 வருட DMLT படிப்பு மற்றும் கணினி அறிவு
மாத ஊதியம்: ₹ 13,000/-
மருந்தாளுநர் (Pharmacist) 1 இடம்
கல்வித் தகுதி:
D.Pharm அல்லது B.Pharm (DME அங்கீகாரம்) மற்றும் பதிவு அவசியம்
மாத ஊதியம்: ₹ 15,000/-
சுகாதார ஆய்வாளர் (HI) 1 இடம்
கல்வித் தகுதி:
12-ம் வகுப்பு (Bio/Botany/Zoology) மற்றும் 2 வருட MLHP/HI/SI பயிற்சி
மாத ஊதியம்: ₹ 14,000/-
பணியாளர் (MPHW) 2 இடங்கள்
கல்வித் தகுதி:
8-ம் வகுப்பு தேர்ச்சி (தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்)
மாத ஊதியம்: ₹ 8,500/-
விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றிதழ்கள் (Self Attested):
விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள சான்றிதழ்களின் நகல்களில் சுய கையொப்பமிட்டு இணைக்க வேண்டும்:
1. கல்விச் சான்றிதழ்கள் (SSLC, HSC, Degree/Diploma).
2. பிறந்த தேதிக்கான சான்று (Birth Certificate/SSLC Mark sheet).
3. இருப்பிடச் சான்று (ஆதார் அட்டை).
4. சாதிச் சான்றிதழ்.
5. முன் அனுபவச் சான்று (இருப்பின்).
6. முன்னுரிமைச் சான்று (மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவை போன்ற பிரிவினர்).
தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலைவாய்ப்பு 2026
தஞ்சாவூர் மாவட்ட நலச்சங்கம் (தேசிய நலக்குழுமம்) தற்போது பட்டீஸ்வரம் வட்டாரத்திற்குட்பட்ட திப்பிராஜபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை 11 மாத ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றிதழ் நகல்களுடன் கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
செயற் செயலாளர்,
மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு,
LIC கட்டடம் அருகில்,
தஞ்சாவூர் - 613 001.
மாவட்ட நலச்சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட சுகாதார அலுவலகம், காந்திஜி ரோடு,
LIC கட்டடம் அருகில்,
தஞ்சாவூர் - 613 001.