8-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அரசு வேலை! ஊராட்சி ஒன்றிய ஓட்டுநர் வேலைவாய்ப்பு 2026 -Apply Now
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை வேலைவாய்ப்பு 2026
ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய விவரங்கள் (Job Overview)
| பதவியின் பெயர்: | ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) |
| மொத்த காலியிடங்கள்: | 01 |
| சம்பளம்: | ரூ. 19,500 - 71,900 (Level 8) |
| இனசுழற்சி: | பட்டியலினத்தவர் அருந்ததியர் (SCA - General) - முன்னுரிமை அற்றவர் |
தகுதிகள் (Eligibility Criteria)
- கல்வித்தகுதி: 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது வரம்பு: 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 37 வயது வரை.
- இதர தகுதிகள்: செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் 5 ஆண்டுகளுக்கு குறையாத முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://erode.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்:
ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம்,
அம்மாபேட்டை, ஈரோடு மாவட்டம். பின்கோடு - 638311
அம்மாபேட்டை, ஈரோடு மாவட்டம். பின்கோடு - 638311
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 50/- (Commissioner, Panchayat Union, Ammapettai என்ற பெயரில் வங்கி வரைவோலை - DD இணைக்கப்பட வேண்டும்).
விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.02.2026 மாலை 5.45 மணி வரை.