முக்கிய அறிவிப்பு: புதிய வேலைவாய்ப்பு தகவல்கள் உடனுக்குடன் இங்கே பதிவேற்றப்படும்...

குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலைவாய்ப்பு 2026 - உடனே விண்ணப்பியுங்கள்!

Posted on: January 23, 2026

ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (District Child Protection Unit) காலியாக உள்ள பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது ஒரு தற்காலிக ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும்.

இதன் முழு விவரங்களை கீழே காணலாம்:

பணியின் விவரங்கள்

பணியின் பெயர்: பாதுகாப்பு அலுவலர் - நிறுவனச் சார்ந்த (Protection Officer - Institutional Care)
காலியிடங்களின் எண்ணிக்கை: 01
மாத தொகுப்பூதியம்: ரூ. 27,804/-

கல்வித் தகுதி

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பின்வரும் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்:

  • சமூகப்பணி (Social Work) / சமூகவியல் (Sociology) / குழந்தைகள் வளர்ச்சி / மனித உரிமைகள் / பொது நிர்வாகம் / உளவியல் / மனநலம் / சட்டம் / பொது சுகாதாரம் / சமுதாய வள மேலாண்மை ஆகியவற்றில் முதுகலைப் பட்டம் (Post Graduate).
  • அல்லது
  • மேற்கண்ட துறைகளில் இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) மற்றும் திட்டம் உருவாக்குதல், செயல்படுத்துதல், கண்காணிப்பு ஆகியவற்றில் 2 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி: கணினி அறிவு (Computer Knowledge) பெற்றிருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வயது வரம்பு:

01.10.2025 அன்று 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை

தகுதியுள்ள நபர்கள் மாதிரி விண்ணப்பப் படிவத்தை கன்னியாகுமரி மாவட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான https://kanniyakumari.nic.in/notice_category/recruitment/ என்பதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் புகைப்படத்தை இணைத்து (Pass Port Size), உரிய ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

கடைசித் தேதி மற்றும் நேரம்: 05.01.2026 மாலை 5.30 மணிக்குள்

(நேரில் அல்லது தபால் மூலம்)

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் - 629001.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.01.2026

முக்கிய குறிப்பு

முழுமையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் காலக்கெடுவுக்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

தகுதியுள்ளவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

Official Website Career Page Link: Click Here


Kanyakumari District Jobs 2026, DCPU Kanyakumari Recruitment, Protection Officer Job Vacancy Tamil Nadu, District Child Protection Unit Jobs, Tamil Nadu Government Jobs 2026, கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு 2026